சந்தம் சிந்தும் கவிதை

ஜெயா நடேசன்

தினம் ஒரு பாமுக கவி
05.12.2023
இலக்கம்-244
கலவரம்
————-
வலம் வரும் கலவரம்
அது வந்து விட்டால் சிதம்பரம் தான்
தாயக்க் கலம்பரம் உயிரை கொன்று மாய்க்குது
சாதி இன மத வேறு பாட்டால்
இரண்டாக வெடிக்குது ஆணவக் கொடுமையது
பெற்றோல் வாங்க வரிசையில் கலவரம்
வயிற்றுப் பசி தீர்க்க பாண் வரிசையில் கை கலப்பில் கலவரம்
அங்காடி கடைகளில் விலை ஏற்றத் தாள்வில் ஏமாற்றும் கலவரம்
திருட்டுக்களில் இளையோரின் வெட்டுக்
கொத்துக்களால் நிலபரம் இழப்புக்களில்
கலவரம்
காணி வேலி சண்டை எம் மக்களிடையே
நித்தமும் கலவரம்
ஆட்சி பீடத்தில் பாராளுமன்றத்தில் மந்திரிகளின் கை உயர்த்தலில் கலவரம்
காலங்கள் செய்யும் கோலங்களில் கடுமையான கலவரங்கள்
நாட்டில் நல்லாட்சி கிடைக்க நாம் வேண்டும் இறைவனின் நல்வரம்
ஜெயா நடேசன் ஜேர்மனி