கவி 649
வாழ்க்கை இதனால் ஆளப்படுகின்றது
தாயிடம் கேட்காமலே கிடைப்பது
தந்தையிடம் அளவற்றுக் கிடப்பது
உறவுகளால் கிடைத்துவிடின் வரமாகும்
இறைவனுக்கு ஒத்ததே இதுவாகும்
நட்பின் தரையில் முளைக்கும்
காதலும் ஒன்றுவிடாமல் சேமிக்கும்
உளங்கொண்டவர் உடல் அழகாகும்
உண்மையில் கொண்டால் பாக்கியமாகும்
உலகத்திலே உயர்ந்த பரிசு
அகிலத்தில் விலை மதிப்பில்லாதது
எதையும் எதிர்பாராமல் கொடுப்பது
பகிர்ந்து கொண்டால் ஊறுவது
இனம் மொழி அறியாதது
இரக்கம் கருணையின் தாயகமானது
உண்மையானது எவரையும் ஏமாற்றாதது
வாழ்வின் அடிப்படையின் அடக்கமானது
இதன் இராட்சியத்தில் சந்தோசமே
இதன் வெளிப்பாடு பரிசுத்தமே
கொண்டாடப்பட வேண்டிய ஒன்று
புண்ணியம் இதுவென என்று
ஜெயம்
19-04-2023