சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

நியாயமற்ற தந்திரம்

தென்னை மரத்திலே நுங்கு காய்த்ததேயென்று
கண்ணால் கண்டேனதையென
உரைப்பாரே பொய்யாகவின்று
பிறரை ஏமாளியாக்கியே பிளைப்பார்கள் நன்றாக
அறிவாய் மனிதா  இதுவாயுலகம் இன்றாக

வெளிப்படையாகவே ஏமாற்றுவார்கள் பிறர்க்குத் தெரியாது
பலிக்கடாக்களோ ஏமாறிப் பின்செல்லும் அறியாது
தரமான பொய்சொல்லி வாழ்வதிலோர் ஈடுபாடு
தரங்கெட்டோர் இவர்களால் பூமிக்கே வெட்கக்கேடு

உண்மைக்கும் ஏன்தானோ சிலரிடத்தில் தட்டுப்பாடு
இன்றுவரை முதுகில் குத்தும் வாழ்க்கையோடு
நடிப்பைக்கற்ற நரிகளெல்லாம் நடமாடுகின்றன தாராளமாக
படிப்பற்ற  காக்கைகளும் ஏமாறுகின்றன ஏராளமாக

ஜெயம்
10-10-2022