சசிச
கவி அழகு
கருவொன்றை கவி புனைய எடுத்து
உருவாக்கி வார்த்தைகளை சந்தங்களைத் தொடுத்து
உளத்தோடு பேசுகின்ற பாவொன்றின் வடிப்பு
உலகத்தில் அதுவன்றோ அழகான படைப்பு
அற்புதமாய் வரியமைத்து மொழி விளையாட்டு
சொற்றொடரில் கொப்பளிக்கும் கற்பனையின் கூட்டு
கவியெல்லாம் அழகாகும் புதுமைகளை சிந்திவிட
செவிநுழைந்து நெஞ்சைத்தொடும் வாசிப்பதை கேட்டுவிட
பாரதியார் கவிகளெல்லாம் கொண்டதென்ன எழில்
காரணம் அவருக்கு கவியெழுதுவதே தொழில்
வனப்பான கவிதைகளும் சிந்தையிலே தேங்கும்
கணக்கில்லா இரசிகர்களை ஈர்ப்பாலே உள்வாங்கும்
ஜெயம்
24-01-2025