சசிச
தேவமைந்தன் அவதரிக்கப்போகின்றார்
இது ஆண்டவர் அவனிக்கு வருகின்ற காலம்
அதனால் பூண்டது பூமியும் மகிழ்ச்சியின் கோலம்
மண்ணகத்தை மீட்க விண்ணகத்து இறைவன் வருவாரே
தன்னையே கொடுத்து மானிடர் வாழ்க்கையை மீட்பாரே
ஏழையெளியவர் வாழ்வினில் இனி சந்தோசம் பிறக்கும்
வாழ வழியற்றோர் நாட்கள் இவராலே சிறக்கும்
எளியவரைப்பார்த்து எள்ளிநகையாடியோரும் மனந்திருந்துவார் இவரைப்பார்த்து
இழிவாக்கப்பட்டோரையும் உறவாக்குவார் கை கோர்த்து
மனிதநேயம் உலகில் ஓங்கவைக்கும் உன்னதர் வருகின்றார்
பிணிகள் நீங்கும் அருளினை பொழிந்திட வருகின்றார்
சாந்தியற்ற குவலயத்தில் சமாதான தூதராக வருகின்றார்
சோந்திருக்கும் மானிடரின் துயர் துடைக்க வருகின்றார்
வானத்து எல்லையை காப்பதுபோல் ஞாலத்தையும் காப்பார்
ஊனமுள்ள உள்ளத்தினுள் உருகிவிடும் கருணைதனை சேர்பார்
ஆணவத்தின் பிடியிலிருந்து அல்லலுறும் மாந்தரை விடுவிப்பார்
காணவொரு புதுவுலகை தன்னன்பாலே அழகாக அமைப்பார்
தட்டினால் திறக்கப்படும் இனி நம்பிக்கையோடு தட்டுவோம்
விட்டுவிடாமல் ஒயாது கேட்போம்
கேட்பதும் தரப்படும்
தேடுவோம் இயேசுவைத் தேடுவோம் வாழ்க்கை கிடைக்கப்பெறும்
கூடுவோம் பாலனின் பிறப்பில் உள்ளம் புதுப்பிக்கப்படும்
ஜெயம்