சசிச
மாற்றம்
கரைந்தோடும் காலத்தோடு கலைந்துவிடும் தோற்றம்
விரைந்தோடும் ஆயுளோடு உடலோடு மாற்றம்
தரையினிலே இதுவரையில் கண்டதென்ன ஏற்றம்
உரைத்துவிடு மானிடா கொண்டிடாது சீற்றம்
நீர் மாறாமல் போனால் மழையேது
நீ மாறாமல் போனால் வாழ்வேது
உலக நியதி என்பது மாற்றம்
விளங்கிக்கொள் இன்றுபோல் இல்லை நேற்றும்
பழையதில் உடும்புப்பிடி கொள்வதாலென்ன லாபம்
நுழைவதால் புதியதும் இல்லையது பாவம்
மனம் மறுத்தாலும் மாற்றத்தை ஏற்றுவிடு
உணர்ந்து உண்மையினை உள்ளத்தினை தேற்றிவிடு
பல களங்களைக் கண்டது காலம்
நில வாழ்க்கையில் ஓயாதே நீளும்
காலதேவனின் மீறமுடியாத கட்டளை இது
வாழ வழிகாட்டும் திசைகாட்டியாக அது
ஜெயம்
16-11-2024