சசிச
போரில்லா பார் வேண்டும்
புலரும் அந்தக்காலை நல்ல விடியலுக்காகவா
நிலத்தில் பேரழிவை உண்டுபண்னும் வெடிகளுக்காகவா
உலகமே இன்று பூண்டுள்ளது போர்க்கோலம்
கலகமே முடிவென்று நம்பிக்கொள்ளும் காலம்
புத்தி நாசமடைந்த கோளைகளின் பயங்கரவாதம்
பித்துப்பிடித்தவரால் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதம்
சத்தியமாய் கூறுகின்றேன் மிருக வெறியாட்டம்
கத்தினாலும் குழறினாலும் காட்டுமிரான்டியாய் காட்டம்
துப்பாக்கி குண்டுகளால் விபரீத விளையாட்டு
அப்பாவி மக்களது உயிருடன் விளையாட்டு
தப்பு செய்துகொண்டு சட்டங்களை மீறுவார்கள்
தப்பித்துக்கொள்ள தகுந்த காரணமும் கூறுவார்கள்
பிணந்திண்ணி கழுகாக மாறிய மனிதர்
இனமென்றும் மதமென்றும் இழந்தார்கள் மனிதம்
தனக்கு தனக்கென்பதாலே வந்ததிந்த அழிவு
மனங்கள் ஒன்றுபடின் ஏனிந்த கண்ணீர்ப்பொழிவு
ஜெயம்
12-11-2024