சசிச
அதிரடி
எதிர்பார்க்காத நேரத்தில் கடுமையான செயல்பாடு
அதிரடியான நடவடிக்கை வளமைக்கு முரண்பாடு
இதிலே யாருக்குத்தான் உள்ளது உடன்பாடு
விதிக்குள் வாழ்க்கை சிக்கிக்கொண்டு பெரும்பாடு
நினைத்தபடி வாழ்வை விதியெங்கே தருகின்றது
நினைக்காதது எதுவோ அதிரடியாய் வருகின்றது
எப்பெப்போ எதுவெதுவோ நடக்கின்றது புரியாது
அப்பபப்போ வாழ்கையை வாழுகின்றோம் தெரியாது
வளமைக்கு மாறாக சிலவேளை காலம்
கலகத்தை பண்ணிவிட அந்தரிக்கும் கோலம்
சாதாரணமாய் வாழ்வுதனை நெஞ்சமதோ அழைக்கும்
அசாதாரணமாய் வந்தொன்று நிம்மதியை குலைக்கும்
அதிரடியாக வாழென கற்றுத்தருகிறது நேரம்
பறிபோக மகிழ்ச்சிதனை விரும்புவாரா யாரும்
அப்பாவும் அம்மாவும் என்ன அதிரடிப் படையா
அப்போ குழந்தைகள் என்ன அமைதிப்படையா
ஜெயம்
08-10-2024