ச.சி.ச
வெற்றிப்பயணம்
தொட்டுவிடும் தொலைவில் உள்ளது வெற்றி
விட்டுவிடவில்லை முயற்சியை தொடர்கின்றேன் பற்றி
விரும்பியே பயணிப்பதால் பாதை எளிதானது
உறுதியின் பின்பற்றலால் முடிவும் தெளிவானது
தோல்வியை புரிந்துகொண்டேன் வெற்றிக்கு எதிரானதல்ல
வாழ்க்கையின் படிகளிலே தெரிந்துகொண்டேனதை மெல்ல
தளராத இதயம் முடியாததென்று இல்லையெதுவும்
விழவைத்தாலுமந்த விதியும் தூக்கிவிடும் அதுவும்
அச்சமென்ன அச்சம் ஆபத்தையும் சந்திப்பேன்
உச்சத்தை அடைந்திடினும் ஏற்றியவரை சிந்திப்பேன்
இஸ்டப்பட்டு கொண்டதனால் அதிஸ்டமான காலம்
கஸ்டங்களின் கரைதாண்டி ஜெயித்ததிந்த கோலம்
தடைகளை அகற்றியிங்கே நகர்கின்றது வெற்றிப்பயணம்
படைத்துக்கொண்டே நாட்களுக்குள் அடைந்துகொண்டேன் பயனும்
உழைத்தபடி வாழ்வதனால் நானொரு வெற்றியாளன்
உலகத்து உன்னதராம் தொழிலாளிகளின் தோழன்
ஜெயம்
01-10-2024