சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச
வசந்தம்

வின் வீதியில் கதிரவன் உலா
மண் மீதினிலே உற்சாகத் திருவிழா
வசந்தம் வந்திங்கு புமியில் தவழும்
எண்ணத்துள் இனியில்லா புத்துணர்வும் தழுவும்

வாட்டமெல்லாம் நீங்கவே வந்ததொரு காலம்
மீட்டிக்கொண்டே மகிழ்ச்சியை விரைந்தெழுமே கோலம்
ஒளிக்கதிர்கள் மண்ணுலக வீதிகளில் விளையாடும்
குளிரும் ஓட்டம்பிடித்து மறைவிடத்தைத் தேடும்

இலையாடை உடுத்திக்கொள்ளும் நிர்வாண மரங்கள்
மலையெல்லாம் புதுத்தோற்றம் வசந்தகால வரங்கள்
பூக்களை பூமிசெய்து எழிலையும் பெருக்கும்
ஆக்கியே வளங்களை இயற்கையும் செழிக்கும்

வரவேண்டும் வரவேண்டும் வசந்தமும் தேடி
தரவேண்டும் தரவேண்டும் நன்மைகள் கோடி
இயற்கையோடு மானிடரும் வளமதனை சேர்ப்பாரே
இயன்றளவு வசதிகொண்டு பாடுகளைத் தீர்ப்பாரே

ஜெயம்
16-06-2024