சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச
பாமுகமே வாழி

ஆக்கிவிட தூக்கிவிடும் எம்மவரின் தளம்
ஊக்கங்கொண்டோர் ஆக்கியங்கு கொண்டனரே வளம்
உண்மையில் சொல்லப்போனால் இன்னோர் தாய்நிலம்
என்றுமதன் அருகினிலே வாழ்க்கையின் குதூகலம்

மொழிப்பசி தீர்த்துமே அறிவூட்டும் அகம்
விழிகளுக்கு காட்சியாகி பாருலவும் பாமுகம்
இருபத்தேழு ஆண்டுகளாக மொழிக்கான பயணம்
உருவாகி பலரங்கே அடைந்துகொண்டார் பயனும்

சின்னஞ்சிறு பாலகரும் நுழைந்திடுவார் உற்சாகத்தோடு
எண்ணத்திலே மேன்மைகொண்டு வெளிவருவார் பகுத்தறிவோடு
சிந்தையிலே தெளிவுகொண்ட ஒருவரது நோக்கம்
வந்துகொள்ளும் தலைமுறையை இருக்கும்வரை காக்கும்

எழுதியெழுதி பலபேரும் பக்குவத்தை கொண்டார்கள்
தழுவிக்கொண்ட புகழதனால் முகவரியும் கண்டார்கள்
எத்தனையோ பேனாக்கள் மையிழந்து ஆயுளைத்தொலைத்தன
அத்தனையும் பாமுகத்தில் படைத்ததனால் விளைந்தன

கருத்துக்களை செவி குவிக்கும் அறிவொழியே
பொறுப்பேற்று வழிநடத்தும் பெருமகனார் தனிவழியே
தொடரட்டும் நின்பணி தமிழோடு எந்நாளும்
கடந்திடும் சந்ததிகள் வளமடையும் எதிர்காலம்

ஜெயம்
09-06-2024