சசிச
அழகு
எங்கு பார்த்தாலும் இயற்கையின் அழகு
பொங்கும் வனப்போடு இந்த உலகு
இறைவன் படைத்த அற்புதப் படைப்பு
குறையே இல்லா எழிலின் தெறிப்பு
மலையினில் பிறந்திடும் அருவியைப் பாரீர்
விளைந்திடும் அழகை இரசித்திட வாரீர்
வளைந்து நெளிந்தோடும் ஆறதன் காட்சி
நுழைந்தால் விழிகட்குள் மகிழ்ச்சியின் ஆட்சி
அந்தி வானம் சிந்திடும் வர்ணம்
கண்டாலே உவகையும் ஊறிடும் திண்ணம்
நற்சத்திரங்கள் புடைசூழ உலவிடும் நிலவும்
உச்சபட்ச மெருகேற்றி பொலிவுடன் திகழும்
கரையை முத்தமிட்டு செல்லும் அலையும்
நுரையைப் பரப்பியே கடலில் அலையும்
மீன்களும் மேலே துள்ளியே விளையாடும்
காண்கின்ற கண்களோ அழகைக் கொண்டாடும்
கவர்ச்சியை கொடுத்திடும் பலநிறப் பூக்கள்
அவனியில் வெளிப்படும் எழில்பட நாட்கள்
வனங்களில் குடிகொண்ட பசுமையின் செழுமை
வனப்பினை புவிபெற்று அடைந்தது முழுமை
அழகு அழகு வானுமழகு மண்ணுமழகு
அழகு அழகு ஆணுமழகு பெண்ணுமழகு
அழகு அழகு கண்டிராதழகு அண்டமுமழகு
அழகு அழகு படைப்புக்களழகு படைத்தவனழகு
ஜெயம்
26-04 2024