சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

பணம்

இதுவன்றி ஓரணுவும் அசையாதென்பது மெய்
இதைத்தேடியே ஓடி உருக்குலைகின்றது மெய்
காலங்கள் எல்லாம் விரயமாவதும் எதனாலே
கோலத்தைக் கரைத்து ஓடுவதும் இதனாலே

மதிப்பையும் மரியாதையையும் அளவிடும் சாதனம்
அன்பையும் அற்பமாக்கிடும் அச்சடித்த காகிதம்
நீதியையும் இது விலைகொடுத்து வாங்கும்
பாதி மனிதாக ஆக்கிவிட்டே நீங்கும்

பாதாளம் வரை பாயும் வேதாளம்
தாராளமாக்க இதைத் தேடுபவர் ஏராளம்
உலக இலட்சியமே இதைச் சேர்ப்பதே
தலைகுப்புற தள்ளினாலும் அதனால்தான் மீட்பதே

பணம் இல்லையேல் வாழ்வே மாயம்
தினமும் ஏற்படுமே மனதில் காயம்
இது இல்லாதவன் சமமாவான் பிணத்திற்கு
அது கொண்டுவந்தது கொண்டாட்டத்தை பணத்திற்கு

ஜெயம்
09-04 -3024