வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 666

மனிதக் கடமை

மனிதத்தை மதிக்கின்ற மனங்கள்
புனிதத்தால் உத்திக்கின்ற குணங்கள்
அன்பினால் செய்திடும் கணங்கள்
உண்மையை தாங்கிடும் தினங்கள்

அறிவின் புரிதலின் செயற்பாடு
பிரிவை தடுக்கும் உடன்பாடு
சிந்தனை செய்தால் நலத்தோடு
சிந்தையும் இருக்கும் பலத்தோடு

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில்
இருப்பின்பின் காணாத விடையில்
பயணத்தில் கற்றதைக் கொண்டு
பயன்பாட்டால் நன்மைகள் உண்டு

சந்தேகம் என்பது நரகம்
நிந்தனை செய்தே நகரும்
சந்தோஷம் என்பது சொர்க்கம்
சந்தித்தால் நிம்மதி தங்கும்

உறவுகள் இல்லையென சொல்லி
பிறரை வைக்கலாமே தள்ளி
உதவும் மனம் இல்லாதோர்
இதயம் இருந்தும் அல்லாதோர்

நல்லது கெட்டதை பகுத்தறிந்து
எள்ளையும் எட்டாக பகிர்ந்து
வாழ்ந்துதான் ஒருக்கால் பார்ப்போமே
தாழ்வில்லா வாழ்க்கையை சேர்ப்போமே

ஜெயம்
18-10-2023