கவி 663
தன்னை அறிந்தவன்
வாழ்க்கைப் பயணம் செல்கின்றது அழகாக
நாளும் புதுப்புது அனுபவம் தெளிவாக
வேகத்தடைகள் போடவென சில நிகழும்
கடுமையைக் கடந்துவிட மகிழ்ச்சியில் முற்றும்
போனதும் வந்ததும் இனி வரப்போவதும்
இன்பதுன்பத்தை இரண்டறக் கலந்தே தரும்
இருப்பினும் பூ வாசமாகவே பூக்கின்றது
புரிதலால் புதிதான மதிப்பான வாழ்க்கை
எவ்வாறு பேசுவதென காலந்தாழ்த்தியே கற்றது
மெளனம் நிறைய சந்தர்ப்பங்களில் பாதுகாத்தது
சூழ்நிலையை மாற்றப்போய் பட்டதெல்லாம் அவமானம்
சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுவதென முடிவு
அனுபவம் ஒருவரை எப்படியும் மாற்றிவிடும்
சரிந்து விழாமல் வாழவும் தெரிந்தது
வந்து சேர்வதெல்லாம் வந்தே சேரும்
விரும்பிய வாழ்க்கையை தேடியே நகர்வு
பிடிக்காத மனிதர்கள் பலரைச் சந்திப்பு
பிடித்த மனிதர்களுடன் பிடிப்போடு பேச்சு
தன்னையே தான் அறிந்த ஓர்நிலை
சிக்கத்தான் வைத்திடுமா துன்ப வலை
ஜெயம்
14-09-2023