வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 656
எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே

சிந்திக்கச் சிந்திக்க முத்துமுத்தாக கொட்டிவிடும்
சந்திக்கும் போதெல்லாம் அமுதமுது ஊட்டிவிடும்
மந்திரமாய் உச்சரிக்க புகழும் எட்டிவிடும்
தந்தே பேரறிவை விலாசம் இட்டுவிடும்

எழுத எழுத ஊற்றாகும் எண்ணங்கள்
பழுதுபடாது கொண்ட சிந்தையின் வண்ணங்கள்
உழுதுகொண்டு மனதை பண்படுத்த ஏராகும்
வழுக்கிவிழா கலாசாரத்தைத் தாங்கும் வேராகும்

நிலத்திலே பார்த்தது புலத்திலும் பூத்தது
அலங்காரம் கூட்டியே அழகையும் சேர்த்தது
இலக்கணம் ஆக்கத்தின் மூச்சென ஆக
இலக்கியம் உருவென சேர்ந்துமே போக

தாளும் பேனாவும் எடுக்காது விடுப்புக்கள்
நாளும் நாளும் ஓயாதே படைப்புகள்
நீளும் பயணத்தில் நீக்கியே தடைகள்
வாழும் வாழ்க்கைக்கும் கிடைத்தன விடைகள்

ஜெயம்
06-0602023