சந்தம் சிந்தும் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-58
21. 01 – 2025

சிறுமை கண்டு பொங்குவாய்

பூமிப்பந்தின் புலம்பெயர்வை எண்ணி பொங்கு
பலகால தேசகனவு கேட்டுப்பொங்கு
மூதாதையரின் விஞ்ஞானம் முடங்கியதையும்
முதியோரெல்லாம் முதியவர் காப்பகத்தில் அடங்கியதையும் பொங்கு.

காடு களனி அழித்து கட்டடம் வளர்ந்ததென்றும்
கருணையற்ற உயிர்க்கொலை நடக்குதென்றும்
ஆயுளை அதிகரிக்க ஆரோக்கிய உணவில்லையென்றும்
ஆண்டவனேயென! செயற்கையாய் வாழும் மனிதன் சிறுமை கண்டு பொங்குவாய்
.
மூளை வளர்ந்து முன்னேற வேண்டிய பிள்ளை
மூலையில் கிடக்குது கணணியோடவென்றும்
மூச்சுவிட திறக்க வேண்டிய கதவும் ஜன்னலும்
மூசு பனி வீசி மூடிக்கிடக்குதென்றும்

ஏழையையும், பட்டினிச்சாவையும் கண்டு நீ பொங்கு
எதுக்கும் துணிந்து வாழ பலன் வேண்டி ஆண்டவனுக்குப் பொங்கு
உன்னை நம்பியவர்க்கு அடைக்கலம் கொடுத்து உள்ளத்தால் பொங்கு நீ
உள்ளமெல்லாம் ஊனப்பட்டவர் சிறுமை கண்டு பொங்குவாய்

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.