சந்தம் சிந்தும் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-57
07. 01 – 2024

பூக்கும் புத்தாண்டு

பூக்கும் புத்தாண்டே
புதுமை பொலிவுடனே
புலத்தில் நிம்மதியும்
பூகோளத்தில் அமைதியும்

கற்பனை சிறக்க
காவியம் படைக்க
காலடி வைக்க
கனவுகள் யொலிக்க

சோகங்கள் விட்டு
சொந்தங்கள் சேர்ந்து
சொல்பேச்சு கேட்டு
சொர்க்க பூமியாக்கி

பெற்றவரை மதித்து
பேராண்பை பூண்டு
பெண்ணடிமை தகர்த்து
பிறப்பில் பேதமற்று

மரங்களை நாட்டி
மற்றான் நலம்பேணி
மதவெறி அகற்றி
மனிதநேயம் காத்து

சுற்றாடல் பாதுகாத்து
சுகாதாரம் வளர்த்து
சுகமாக சுவாசித்து
சுறுசுறுப்பாய் வளர

புத்தாண்டே நீ
புலர்ந்து வா
புன்னகை மலராய்
பூக்கும் புத்தாண்டே.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.