அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-53
26-11-2024
உயிர்கொடை
தானதர்மம் செய்வதில்
தருமனும் கர்ணனும்
வரலாறில் படித்த
வள்ளல்களே!
தக்க சமயத்தில்
தன் இனம், மொழி காக்க
தன்மானம் கொண்டு
தம் உயிர்நீத்த தலைவனே!
உயிர்கொடை உத்தமரே
உறவுகளை பிரிந்து நின்று
உணவுகளும் பல நாளின்றி
உலக நாடும் கேட்பாரின்றி
செங்களமாடிய
செல்வங்கள் நீவிர்.
செய்த கொடைக்கு ஈடேது
சென்று வருவீர்கள் தாங்கள்!
எம் இனங்களின் மனங்களில்
உங்களின் தியாகம்
செங்காந்தளின் தீ சுவாலையாய்
சுடர் விட்டெரியட்டும்
தங்களின் கனவுகளும்
தாகங்களும் உறங்காது
கைகொடுத்து, காந்தள் மலர்கொண்டு
கைதொழுது மண்டியிடுவோம்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.