அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-52
19-11-2024
மாற்றம்
பொதுநலம் முற்றுமற்று
போதிய சுயநலம் உற்று
நேசம் நிறைந்த நண்பரும்
நாசம் பண்ணும் காலமிது!
உடல் வலுவிளந்தாலும்
உளநலம் குன்றாது
அகந்தையைக் குறைத்து
ஆக்கத்தை பெருக்கி
ஓடிக் கொண்டேயிரு
ஓய்வு வரும் வரை
சாதிக்க நினைத்தால்
சாதனை சந்திக்கும்
தேகம் தேய்ந்தாலும்
தாகம் தமிழில் குறையாமல்
மோகம் பிறமொழியிலற்று
வேகமாய்ப் போராடு
மனித நேயத்தை
மனதிற்குள் தேடி நாம்
உன்னில் மாற்றம் தேடாமல்
எம்மில் தேடிக் காப்போம்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.