சந்தம் சிந்தும் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-42
25-06-2024

நடிப்பு

நாடக மேடை வாழ்க்கையிது
நடிகரும் தானே நாமிங்கு
நல்லவன் என பலர் சொல்கையில்
நடிப்பும் தெரியுது பாரிங்கே

எத்தனை வேடம் தாங்கி விட்டோம்
எடுத்த காரியத்தில் ஜெயித்தும் விட்டோம்
பெற்றோர் வேடத்தில் நீ இருக்க
பிள்ளையாய் நானும் நடித்திருக்க

நிறம் மாறும் மனிதனை
நீ புறம் தள்ளி விட்டு
அறம் செய்யும் பணிதனை நிலை நாட்டு
அதுவே இல்லறம் சிறக்க விடும்

வலியோடு வாழ்ந்த மண்ணில்
பலியான உயிர்கள் எங்கே?
கண்ணில் தோன்றிய காட்சியெல்லாம்
கனவினில் நின்று போய்விடுமோ?

விழியோரம் வந்த கண்ணீரெல்லாம்
விதியாய் நடித்த நாடகமா?
உலகே நிலையற்றது புரிந்து விட்டால்
உனக்கு நடிப்பே தேவையில்லை.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.