சந்தம் சிந்தும் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-12

24-05-2023

முள்ளிவாய்க்கால்

மே பதினெட்டு தமிழ் இன வரலாற்றில்
மாறாத வடு சுமந்த கரி நாள்.
மனமெல்லாம் எம்மினம் எண்ணி வெந்து தவிக்குது இந்நாளில்.

தமிழினமே செங்குருதியில் தவழ
குறைமாதத்தில் குண்டு பிளந்து வந்த சிசுவும்
நிறைமாதத்தில் தாய் இளத்து நின்ற மகவும்
குற்றுயிராய்க் கிடந்த தாயில் பாலருந்திய சேயும்

உணவற்று இனத்தைத் துறந்து
உறவைப் பிரிந்து
வழிகாட்டிய தலைவனை இழந்து நடைபிணமான நாளிது.

வானைப் பிளக்கின்ற யுத்தச் சத்தங்கள், பூமியை இரத்தக்கறையாக்கிய நாளிது.
வேண்டாம் எதிரிக்கும் இந்நிலை
வெந்த இதயம் கொண்ட இந்நிலை.

உலக நாடுகள் பார்த்துக் கொண்டும். எதிரிகள் குண்டுமழை பொழிந்தும்
வெந்த தணலிலே இதயம் வெந்தும்
எம் இனம் தவிக்க,

கேட்கவும் நாதி அற்றவராய்.
குவிந்த உடலை குழி தோண்ட யாருமற்ற
நிர்கதியாய் நின்ற நாளிது.
நாடி நரம்பெல்லாம் ரணமாகி
வாடி வயிறெல்லாம் கலக்குது
இந்நாள் நினைக்கையில்.

நீதித் தாயே எங்கே எமக்கு நீதி
செங்குருதி சங்கமான செங்கடலே
எங்கே எமக்கு நீதி??
மடிந்த உடலைத் தாங்கிய பூமித்தாயே எமக்கு நீதி உண்டா??
யுத்தத்தில் தொலைந்த
மொத்தத்தின் அழு குரல் கேட்கவில்லையா??
இன்னமும் அமைதி ஏன்??

நன்றி
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.