சந்தம் சிந்தும் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-28

19-03-2024

பெண்மையைப் போற்றுவோம்

பாரதி கண்ட கனவே
எம்மினத்தின் புதுமையே
பரந்த உலகில் பயணிக்கின்றாய்
பயணம் மேலும் தொடரட்டுமே!

ஆணினம் உன்னை அடக்கவில்லை
அடங்கிப் போபவளும் நீயல்ல.
அறிவென்பது உனக்கு ஆயுதமல்லவா
அதை புகட்ட வலியுடன் போராடு நீ!

குடும்பம் தழைக்க உரமிடுபவளே
குத்துவிளக்காய் ஒளி தருபவளே
மெழுகுவர்த்தியாய் உருகுபவளே
பெண்மைக்கு ஈடாய் ஏது இங்கு?

சாதிக்க துடிப்பவளும் நீயல்லவா
சாதனை புரிபவளும் நீயல்லவா
பல்வேறு துறைகளில் ஆளுமைகளும்
வெற்றியும் தெரியுது வீர மங்கையாய்!

தமிழ் இனமே! மடியிருத்திய அன்னையை
வலுவான கைகளில் தாங்கிக் கொள்.
குலவிளக்காய் ஒளி வீசும் மனைவியை
இதயக் கோவிலுக்குள் பூட்டி வை!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.