🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-26
30-01-2024
மாசி
மாசிமாத மகத்துவம் நீ யோசி
மன வலிமை நிறையவே நேசி
கலை, கல்வி கற்கவும், பல காரியமும் பன்மடங்கு பெருகுமாம் அனுகூலமும்
சிவத்தோடு சக்தி இணைவரே
மகாசிவராத்திரியும் இதுவே
மாங்கல்ய மாதமும் இவரே
அம்பிகை வழிபட இல்லறம் அமையும்
மகா சங்கடஹர சதுர்த்தி
போக்கிடும் சங்கடங்களை
மாசி பெளர்ணமி
சிறந்திடும் தர்ப்பணத்திற்கு
ஏகாதசி அருளிடும் நற்கதி
மாசிமக நற்பேறு பெற கடலில் நீராடு
முழு மாசியும் அருளிடும் இறைவழிபாடு
இதுவே அளித்திடும் நிறை வாழ்வு.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.