சந்தம் சிந்தும் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

வாரம் 250
பாவை அண்ணா

நான் பெற்ற இன்பம்

சந்தம் என்பது உன் பெயரா
சந்தித்தது என் வரமா
பாமுகம் எனும் தளத்தினிலே
பலமுகம் சேர்ந்தொன்றாய் நியத்தினிலே

வாரமும் 250 கண்டு விட,
செவ்வாய் தோறும் பாவை அண்ணா,
பல கவிஞருடன். அதிபர், துணைவியர், சக உறவுகளுக்கும் கோடா கோடி நன்றிகள்.

உயிருடன் கலந்த தாய்மொழியே
பல வரலாறு கண்டவள் நீயல்லவா
கவிதைக் களத்தினில் வந்ததனால்
தமிழைப் புரட்டிப் பார்க்கின்றேன்

நான் பெற்ற இன்பம் இத்தளத்தினிலே
யாவரும் பெற்று வாழ்கவென
வாழ்த்திப் பல்லாண்டு, பல்லாண்டென
நன்றிக்கரங்கள் குவித்து நவில்கின்றேன்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.