🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-59
28. 01 – 2025
கவியழகு
கற்பனை கதையெடுத்து
கதையிலே கருத்தொடுத்து
எதுகை மோனையும்
உவமை சந்தங்களும்
வண்ண எழுத்தாக
வடித்தாலே கவியழகு
விடியும் பொழுதும்
வீணாகும் நேரமும்
குடியும் கொண்டாட்டமும்
குடும்ப சீர்குலைவும்
விண்வெளி சென்றவனும்
வீதியிலே உறங்கியனும்
முன்னேற்றம் கொண்டவனும்
முடியாமல்ப் போனவனும்
முடங்கிடா உணர்வுடன்
முடிந்ததை வெளிக்கொணர்ந்து
சிந்தனை சாளரங்களை
சீர் செய்து புத்தியால், புத்தகத்தால்
விமர்சனமாய் விழித்தெழும்
அக வெளிப்பாடு கவியழகு.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்