வியாழன் கவிதை

செல்வி நித்தியானந்தன்

எழுத்தறிவில்லை எனில்

எழுத்தறிவில்லை என்றால்
ஏளனமாய் பார்க்கும் மானிடம்
ஏக்கமாய் எண்ணியே
நாளும் கழிந்திடும்

எழுத்தறிவில்லா குழந்தைகள் ஏழ்மையில் வாடிடும்
பணபலம் இருந்தும்
பகடைக்காயாக உருளும்

ஆளுமை அரசியலாய்
கொடுமைகள் காட்டல்
அவனியில் விரட்டியே
சந்ததியை காப்போம்

: எழுத்தறிவித்தவன் இறைவன்
எண்ணியே நிறைவாய் வாழ்வோமே