பெருச்சாளி
பெருச்சாளி கதை கொஞ்சம் கேளு
பெரும் பணத்தை
சுருட்டினாரு பாரு
பெட்டி கட்டிதானே
கெத்து காட்டினாரு
பொட்டகம் நிரப்பி
வழி அனுப்பினாரு
கள்ளக் காசுகள்
களம் அடித்தாரு
கண்டம் கடந்து
காசு மறைந்தாரு
கதி கலக்கமாய்
கண் உருட்டுராரு
களவாணி கூட்டத்தை
கரம் ஒடிப்பாரு
போதை கடத்தலுக்கு
கூட்டணி சேர்ந்தாரு
பாதை வழித்தடமாய்
பட்டையும் அடித்தாரு
பதவி மோகத்தால்
பலதை பண்ணிணாரு
பக்க பலமுமாய்
பாரைத் திறந்தாரு
பெருச்சாளி புடிக்க
பொறி வைப்பாரு
பெத்த வயிறுகூட
பிளந்து எரியும்பாரு
பிணமும் எழுந்து
பிரமிக்கும் பாரு
பெரும் துண்டுடிட்டு
வரவேற்க்கும் நாடே
செல்வி நித்தியானந்தன்