வெற்றி பயணம்
வெற்றிப் பயணம்
இன்று
வீறுநடை பயிலு
மன்று
பற்றிய கொடியே
நன்று
பயணத் தடையே வென்று
பட்ட பாடு
அன்று
படித்த ஆட்சி
என்று
பலரும் சொல்ல மென்று
பக்க பலமாய்
நின்று
வெறும் வாயை
தின்று
வெட்டிப் பேச்சு கொன்று
வேள்வி தீயை
வென்று
வெற்றி வாகை
கன்று
போதை ஆட்டம்
இன்று
போட்ட சட்டம்
நன்று
போகும் பாதை
வென்று
போற்றும் உள்ளப் பண்பு
செல்வி நித்தியானந்தன்