சந்தம் சிந்தும் கவிதை

செல்வி நித்தியானந்தன்

விடியுமா நம்தேசம்

வெள்ளையர் ஆட்ச்சியில்
வேடம்தாங்கிய சிங்கம்
கொள்ளையர் தொடர்ச்சி
கோசமும் நீடிப்பாய்

தமிழினம் இன்றுமே
தலைமையில். சூழ்ச்சி
தக்கதருணம் இப்போ
தட்டிக்கேளு நீட்ச்சி

பேரம்பேசி விலையாய்
பேச்சுபோகும் முறையாய்
தூரம் இன்னும் இல்லை
துரத்தி அடி மூச்சாய்

பொன்னு விளையும் பூமி
பொத்தி காத்த பெருமை
கண்ணு பட்ட தேசமோ
காசிற்கு விலையாகும் கூட்டம்.

செல்வி நித்தியானந்தன்