சந்தம் சிந்தும் கவிதை

செல்வி நித்தியானந்தன்

பருவம்
பருவம் இயற்கையில்
பாரினில் மாறிடும்
உருவம் செயற்கையில்
மாற்றிடும் மானிடம்

இயற்கையின் சீற்றமோ
புயல் மழையாய் அழித்திடும்
இறைவனின் குற்றமோ
இடர்களாய் தொடந்திடும்

பருவத்தின் மாற்றலாய்
தொழில்நுட்ப முன்னேற்றம்
படைக்கும் ஆற்றலாய்
தடைதாண்டி விண்ணோட்டம்

பருவமோ பலவிதம்
பார்பதும் பலரகம்
இளமையும் ஒருசுகம்
இன்பமாய் இருந்திடும்.

செல்வி நித்தியானந்தன்