பெண்மையைப் போற்றுவோம்
மண்ணிலே போற்றுதலும் பெண்மை
விண்ணிலே செல்வதும் உண்மை
கண்ணிலே மணியானதும் மென்மை
பெண்ணாலே தண்டிப்பதும் வன்மை
உலகில் பதிவில் பெண்மையின் உழைப்பு
உயர்ந்து நிற்கும் பெருமையின் சிறப்பு
உலகில் ஆளும் பெண்மையின் நிறைப்பு
உவகை கொள்ளும் ஆளுமை பொறுப்பு
கருவறை தாங்கி சுமைகளை தூக்கி
கல்லறை சென்றாலும் கடக்கனும் பாக்கி
கண்ணீர் சொட்ட அழுகையை அடக்கி
காலமெல்லாம் மெளனமாய் வாழ்பரும் பெண்ணே
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
பெண்மையை மதிப்போம் பெருமை கொள்வோம்
Selvi Nithianandan