வியாழன் கவிதை

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 11-05-2023
ஆக்கம் – 44
வெறுமை போக்கும் பசுமை

சுயநலமிக்க மனிதனின் பேராசையால்
பொலிவிழந்து போனது பூமி
வளங்கள் சுரண்டப்பட்டு
உயிர்கள் வாழ முடியாத நிலையில் உலகம்

நிலம் நஞ்சானதால் உணவும் நஞ்சானது
மருந்திற்கு நோயை உருவாக்கும் காலமானது
நீர் வளச்சுரண்டலும் பெரிகிப்போனது
நீரின்றி உலகம் தவிக்கின்ற காலம் வரப்போகின்றது

காடுட்டு வளங்கள் யாவும் அழிக்கப்படுகின்றது
உயிர் காற்றின்றி உயிரினங்கள் தவிக்கின்றது
விண்வெளியிலும் விஞ்ஞானக் கழிவுகள் சுற்றுகின்றது
அழிவின் பாதைக்குள் அண்டமே அகப்பட்டு நிற்கின்றது

எதுவரை செல்லும் இந்த அழிவின் பாதை
இயற்கையிடமிருந்து மிகப்பெரிய
பாடத்தைக் கற்றுக்கொள்ளும் வரை
வெறுமை போக்கும் பசுமை எப்போ வரும்
இயற்கையோடு ஓன்றி வாழும்போது வரும்

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
9-05-2023