சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 263 ]
“அழகு”

அழகைத்தேடி அலையும் இன்றைய மகளிர் கூட்டம்
புற அழகை மெருகூட்டி அகஅழகை புறந்தள்ளும் நாட்டம்
முதுமையே அழகின் எதிரியென அறியும்போது முகவாட்டம்
குண அழகே பெண்களை உய்விக்கும் தேட்டம்

கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் அழகு
காட்சிக்கு அழகானவற்றை கைப்பற்றத்துடிக்கும் மனது
அழகாய் இருந்தும் தீமை பயப்பன பல உண்டு
ஆராய்ந்துபார்த்து பயனறிந்து தெரிதல் நன்று

அகத்தின் அழகோ முகத்தில் தெரியும்
வரவுபார்த்துச்செலவு செய்தல் குடும்பத்திற்கழகு
பொறுப்பான தலைவனால் வீட்டுக்கழகு
குணங்கொண்ட இல்லாள் இல்லறத்துக்கழகு

நன்மக்கட்பேறோ அதனிலும் அழகு
நலமான குடும்பங்கள் சமுதாயத்திற் கழகு
சமுதாயங்கள் உயர்ந்தால் ஊருக்கழகு
மேன்மை கொண்ட ஊர்கள் நாட்டிற்கழகு

இரப்போர்க்கு ஈந்து வாழ்தல் மாந்தர்க்கழகு
தன்போல்பிறரை நேசித்தல் மனிதநேய அழகு
அன்பும் அறமும் மேவ பண்புடையோராய் வாழ்தல் உலகழகு
இறந்தபின்பும் வாழ்தல் மனிதகுலத்துக்கும் அழகு

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்