[ வாரம் 261 ]
“பெருமை”
பெருமையை நாடினோர் சிறுமையை நாடிச்செல்லார்
பெருமையின் சிறப்பறியா புல்லரும் நம்மிலுள்ளார்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென்றார்
அவர்தம் செயல் வினையால் அன்றோபேதமடைகின்றார்
பிறர் செய்யயியலா செயல் செய்து பெருமையடைகின்றார்
பழம் பெரும் புலவரும் நீதிநெறி வகுத்தசான்றோரும்
மானிடப்பிறவி எய்தல் அரிதினும் அரிது என்றார்
மாதராய் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமென்றார்
பிறவியின் நோக்கமறியாது வாழ்க்கையில் தாழ்வடைகின்றார்
கற்புடமை போற்றும் மாதர்க்கு என்றும் பெருமை
தற்காத்து தகைசான்ற ஆடவருக்கும் பெருமை
சொற்காத்து சோர்விலா உழைக்கும் பெண்ணுக்கும் பெருமை
பெற்றோர்க்கு நன்மக்களால்பெருமை மகனால் பெற்றவர்க்குப்பெருமை
இனமத மொழி கடந்து ஆற்றும் பொதுச்சேவைக்குப்பெருமை
சமூகச்சீரழிவை எதிர்த்துப்போராடுவோர்க்குப்பெருமை
செங்கோலாட்சி சிறப்புறஆற்றும் அரசுக்குப்பெருமையிலும் பெருமை.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.