சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

வாரம் 258

” மாறுமோ மோகம்”

நூறுநாள்ஓதி ஆறுநாள்விட தீருமாம்கல்வி எனும்ஞானம்
நாளில்பிறந்து நாட்பலசென்றாலும் தீருவதில்லை இந்தமோகம்
ஆசைகொண்ட பொருளைகைப்பற்ற நாடிச்செல்லும் வேகம்
அடைந்தாலும் தீராது எந்நாளுமிந்த மோகம்

ஆசைக்கும் அளவுண்டு ஆயுளுமுண்டு
பேராசைக்கு அளவு,ஆயுள் எனும் எல்லையேது
ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள்
வள்ளுவரும் சொல்லிவைத்தார் அன்றே

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை என்றே
மேலும் மேலும் வளரும் ஆசையின் எல்லை
அவா இன்றேல் தவா இல்லை என்பதே உண்மை
பருவத்தில் வசந்தம்போல் மனிதவாழ்வில் இளமை

கொடிதினும் கொடிது இளமையில் வறுமை
மற்றவர் வசதிகண்டு மருண்டிடும் நெஞ்சம்
உழைத்தால் உயரலாம் எனஎண்ணாது கொஞ்சம்
படைத்தவன் படிஅளப்பான் என்றே பூரணதஞ்சம்

பாரதி சொன்ன பசித்திரு, அறிவுப்பசியில் மோகம்
தனித்திரு, துறையொன்றின் உச்சத்தைஎட்டும் மோகம்
விழித்திரு, அவதானித்து செயற்படும் மோகம்
இம்மூன்று மோகங்களுக்கும் முதலிடம் வழங்குவாய்

முதலெழுத்துக்கள் சுட்டும் பதவியைப்பெறுவாய்
“பதவி” உன்னை உயர்த்தும் உன்னால் மற்றவர் உயர்வார்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்