[ வாரம் 251 ]
“மாசி”
மாதங்களில் நாட்குறைந்து நலிந்துபோன மாசியே!
நான்காண்டுகளில் ஒருநாள் மட்டும் வளர்கின்றாய் மாசியே!
சிறுமியானாலும் சிறப்பாய் வந்து செல்கிறாய் மாசியே!
தொடர்மாரிக்குளிர் நீங்க வெப்பமூட்டுகிறாய் மாசியே!
வேளாண்மை முடிந்தும் மாற்றுப்பயிரேற்றி மகிழும் மாசியே!
பூத்துக்குலுங்கும் பயிர்களை வெகுபொலிவாய் காட்டுவாய் மாசியே!
பொய்மழையில் பூக்கள் கழுவுண்டுபோனால் கதறித்துடிப்பாய் மாசியே!
பின்னால்வரும் வசந்தம்உணர்ந்து பூரிப்படைவாய் மாசியே!
சிவனார்க்கு சிவராத்திரி கொண்டாடி மகிழ்வாய் மாசியே!
மகநட்சத்திரப் பெருவிழாவால் மகிமை பெற்றாய் மாசியே!
காதலர் தினம் கொண்டாடி முழுஉலகுக்கே இன்பமூட்டுகிறாய்.மாசியே!
உலகம் உன்னைப்போற்றி மகிழ்கிறது உவகைகொள்வாய் மாசியே!
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.