சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 249 ]
“பொங்கலோ பொங்கல்”

முற்றிவிளைந்த நெல்லில் புதிதெடுத்து அரிசியாக்கி
பால்,பழம்,பாகு,பருப்போடு பொங்கலாக்கி
சூரியனுக்குப்படையலிட்டு நன்றி சொல்லும் தமிழுழவர்
உயிர்கள் வாழவே மேன்மையாக்கும் பொங்கலோ பொங்கல்

கண்ணெதிரே காட்சிதந்து வாழ்க்கைக்கு வழிகாட்டும் சூரியன்
கற்பனைக்கடவுளர்க்கு கல்லால் கோயில் எழுப்பும் தமிழா
கேளாமல் உனக்குதவும் சூரியனுக்கு கோயில்கண்டாயா?
பொங்கலன்று பொங்கலோ பொங்கல் எனக்குரவை எழுப்புதல் நியாயமா?

தைபிறந்தால் வழிபிறக்கும்,உணவுக்களஞ்சியங்கள் நிரம்பும்
வயிறாற உயிர்கள் உணவுண்டு உலாவி மகிழும்
பசிய போர்வையால் இயற்கை உலகைமூடும்
முயற்சியும் பயிற்சியும் நிறைந்தால் உலகு சிறக்கும்.

“பொங்கல் நாளிலிருந்து முன்னேற முயல்வோம்
பொங்கலோ பொங்கல்,எண்திசையும் பரப்புவோம்”

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.