வாரம் 182
“முன்னறி தெய்வம்”
அம்மையும் அப்பனும் முன்னறி தெய்வம்
ஆன்றோர் உரைத்த கண் கண்ட தெய்வம்.
சித்திரா பெளர்ணமியன்று ஒளி வீசும் அன்னை
ஆடி அமாவாசையன்று அருவுருவமாய் தெரிவும் தந்தை.
இருக்கும் வரை எமக்காக வாழ்ந்த அன்னையும் தந்தையும்
அன்பினில் உயர்ந்து நின்ற அன்னையும் அறிவினால் தீபமேற்றிய தந்தையும்.
இன்றிவர் இலனென்று போயின் மறப்பவர் மனிதரா.?
கண்முன்னே உலாவிய தெய்வங்கள் போற்றிப்பணிதல் எங்கடன்.
தாயிற்சிறந்த கோவிலுமில்லை,
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
எமக்காய் வாழ்ந்து, எமக்காய் மடிந்தவர்கள்.
நாளும் மறக்கொணாத் தெய்வங்கள்
ஆண்டுக்கொருமுறையாவது
இவர்களை நினைத்து
எமது நன்றியை நிலைநாட்டுவோம்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.