“பசி”
உயிர் வாழ உதவும் பசியெனுமூக்கம்
உண்ணுமுணவை சக்திமய மாக்குமாலை வயிறு
பெருக்கல் விதியில் அதீத சனத்தொகைப் பெருக்கம்
உணவுற்பத்தியோ கூட்டல் விதிக்கும் குறைந்த சுருக்கம்
கேட்டால் தருவான் இறைவன்,மதங்கள் கூறும் நம்பிக்கை
பசியை மட்டும் தருவான்,உணவை முயன்று பெறவைத்தான்
படைத்தவன் மேல் பழியில்லை,பசித்தவன் முயற்சி வேண்டும் அதிகம்
சோம்பி இருப்பானை பரிகசிக்கும் நிலமகள் பாடுபடுபவனிற்கு பரிவுகாட்டுவாள்.
தனியொருவனுக்கு உணவில்லை எனில் உலகை அழிக்க முயலும் பாரதி
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் சாதியை சாடும் ஔவை
பகிர்ந்துண்டு பழகியவனை அண்டாது பசிப்பிணி எனும் வள்ளுவனும்
உழுதுண்டு வாழ ஊக்கமது கொள்ளின் இரந்துண்டு வாழ்வார் இலரென்று ஆகும்.
“நீரில் விழுந்தவனிற்கு நீச்சலைக்கற்றுக்கொடு” தூக்கி விடாதே”
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.