சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

வாரம் 233

“மலைப்பு”

காரணமறியா எதிர்பாரா உணர்வே மலைப்பு
ஆன்றோரால் மகனைச்சான்றோன் எனக்கேட்கும் தாய்க்கோ மலைப்பு
வறுமையில் வாடுபவன் காலடியில் புதையல் கிடைத்தால் மலைப்பு
பட்டினியால் வாடுபவனுக்கு பல்சுவை விருந்தால் மலைப்பு

நிறைவேறா வாக்குறுதிக
ளால் வென்ற அரசியல்வாதிக்கு மலைப்பு
வெளிநாட்டுச்சம்பந்தம் பெண்ணின் பெற்றோர்க்கு மலைப்பு
வளமிருந்தும் கன்னியாயுலாவும் மகளை நினைத்து பெற்றோர்க்கு மலைப்பு
எப்படியும் வாழலாம் என்று வாழ்வோரை காண இறைவனே மலைப்பு

தாலியும் மழலையும் அடிமை விலங்கென புறம்தள்ளும் மாதரைக்கண்டு மலைப்பு
தன்சுதந்திரத்திற்காய் ஆணை அடிமையாக்கும் பெண்ணைக்கண்டு மலைப்பு
எந்த இழப்பையும் தாங்கும் மனைவி கணவனை மட்டும் கைவிடமறுத்தாலும் மலைப்பு
சொல்லாமல் செய்தல் சிறப்பு செய்ததை மிகைப்படுத்தி அடிக்கடி சொல்வர் எளியோர் இயல்பு,கண்டிடும் கடவுளுக்கோ மட்டற்ற மலைப்பு

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்