சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 229 ]
“இயற்கை”

இயன்றளவு வளங்களை எமக்களிக்கும் இயற்கையன்னை
உலகில் வாழும் உயிர்கள்யாவும் தெய்வமாய்ப்போற்றும் உன்னை
உன்கருணை இல்லையெனின் உயிர்களடையும் வாழ்வின் எல்லை
காக்கும் கடவுளாக உலாவந்து உயிர்காப்பது உன் கடமை

மாதமும்மாரி பொழிதல் நீ அளிக்கும் அருட்கொடையம்மா
காற்றும் நீரும் இலவசமாய் வழங்கி உயிர்காத்தல் உன் குணமம்மா
நீ வழங்கும் தானங்கள் போதாமல் புதிய வளங்கள் தேடுகிறாரம்மா
நீ பேணிவந்த வாழ்க்கை வட்டம் சிதைந்து பருவ காலங்கள் பொய்ததம்மா!

இயற்கை தந்ந நீரைப்போத்தலில் அடைத்து விற்பனை நடக்குதம்மா!
ஆலைகளென்றும் ஆராய்ச்சியென்றும் காற்று அசுத்தமாகி மூச்சுத்திணறுதம்மா!
நீ கொள்ளும் சினம் நியாயம்தானம்மா! பாவிகளைத்தண்டித்தல் நீதி தானம்மா!அப்பாவிகளையும் சேர்த்தழித்தல் அநீதியன்றோ,அம்மா!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்