‘பூக்கும் புத்தாண்டு”
இன மத ரீதியில் உலகெங்கும் கொண்டாடும் புத்தாண்டு
நாட்டுக்கு நாடு வேறுபட்ட திகதிகளில் இடம்பெறுவதுண்டு
ஆங்கிலேய கிறீஸ்தவ ஆண்டுஆரம்பம் தை ஒன்று புத்தாண்டு
இலங்கையில் சிங்களதமிழ் சித்திரை ஒன்று புத்தாண்டு
மனிதவாழ்வில் மிகமுக்கிய நிகழ்வு புத்தாண்டு
வாழ்வின் வளம் பெருகநம்பிக்கையூட்டுவது புத்தாண்டு
தமிழரின் சித்திரைப்புத்தாண்டுக்கு சோதிட ஞானமுமுண்டு
மருத்து நீர்வைத்து தோய்தல் தமிழ்பண்பாடு
கோலமிட்டு முக்கனிகள் வெற்றிலை பாக்கு பூ வைப்பது
இல்லங்கள் ஆலயங்களில் பொங்கலிட்டு வரவேற்பது
இறையருளால் ஆண்டுமுழுவதும் நலமே வாழவழிவகுப்பது
ஆலயதரிசனம் உறவினருடன் விருந்துண்டு மகிழ்விப்பது
போர்த்தேங்காய் அடித்தல் மாட்டுவண்டிச்சவாரி
கைவிசேஷம் வழங்குதல் ஆயுதபூசை செய்தல்
அரசுகளும் நாட்பார்த்து ஆட்சியை ஆரம்பிப்பதும்
புத்தாண்டு பலன்பார்த்து நற்கருமங்கள் தொடங்குவதும் இயல்பு.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.