[ வாரம் 288 ]
“பனிப்பூ”
உலகில்காணும் பொருட்கள் யாவும் மூவகை
திண்மம் திரவம் வாயு எனும் மூநிலை
தாகந்தீரப்பருகும் தண்ணீரோ திரவநிலை
நீருறைந்து பனிக்கட்டியாகும் திண்மநிலை
வெப்பத்தால் நீராவியாகும் வாயுநிலை
இவை தட்பவெப்பமாற்றத்தால் ஏற்படும்நிலை
ஆசைகள் நிறைவேறும்பொழுது ஏற்படும் களிப்பு
அதனால் மனதில் என்றென்றும் ஏற்படும் பனிப்பூ
மனிதவாழ்வின் தோல்வியால் தோன்றும் சலிப்பு
மனதில்தோன்றும் பனிப்பூ மலராதா எனும் நினைப்பு
நினைப்பவை நடந்துவிட்டால் தெய்வத்திற்கேது அழைப்பு ?
காதலில் வென்றால் இதயம் மெய்சிலிர்க்கும் பனிப்பூ
தோற்றவரால் இலக்கிய காவியங்கள் வளர்ப்பூ
போரினால் மடிந்தமக்களின்மனதில் மாவீரர் குடியிருப்பு
இடையே மௌனித்த ஈழப்போரில் மீண்டுமோர் துடிப்பு
கொட்டும் மழையிலும் கொண்டாடும் மாவீரர்தின மிடுக்கு
மாவீரர் தினநாளில் ஈழத்தமிழ் மனங்களில் பனிப்பூ
சுதந்திரதமிழர் தாயகம் ஒருநாள் விடியும் எனும் துணிபு.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.