சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 276 ]
“பருவம்”

முதன் முதலில் பள்ளிக்குச்சென்ற பருவம்
அம்மாவின் கையைவிட மறுத்துஅழுத துன்பம்
பள்ளிப்பருவ நினைவுகள் தொடர்ந்து அலைபாயும்
மதிய உணவு பரிமாறி உண்டதொருஇன்பம்

புதிய பேனா காட்டி மகிழ்ந்த பெருமிதம்
இனி எப்போது வரும் இந்தப்பள்ளிப்பருவம்
சிறுவராய் நாம் மகிழ்ந்து குலாவிய காலம்
சாதி மத பேதம் எதுவுமே அறியாதநேரம்

சண்டைகளும் உண்டு ஆனால் சமரசமே முடிவாம்
ஆண்டுகள் செல்லச்செல்ல வகுப்புகள் உயரும்
புதுச்சொந்தங்கள் சேர்ந்து எண்ணிக்கை கூடும்
பழைய சொந்தம் நிச்சயம் மறந்து போகும்

பருவம் மாறும்போது பாதையும் கொஞ்சம் மாறும்
புதிய ஆசைகளைச்சொல்லெணாது மனம் தவிக்கும்
கல்வியில் ஆசைவந்தால் உயரவும் ஏற்றிவைக்கும்
நட்பு ஒன்று சொல்லும் சிந்தையும்உடன்அங்குசெல்லும்

உடையினில் மாற்றம் புது அழகினைக்காட்டும்
உள்ளமோ தாங்கொணா அழுக்காய் மாறும்.
பருவகாலத்தில் பயிர் செய்தால்பஞ்சம் பறக்கும்
பாதைமாறாத பருவம் பழியில்லா வாழ்வுதரும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.