சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 274 ]
“வாழ்வும் பொருளும்”

பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை,அருள் இல்லார்க்குஅவ்வுலகில்லை
இரண்டுமிலார்க்கு எங்குமே இடமில்லை
வரும்போது எதுவும் எடுத்துவருவதும் இல்லை
போகும்போது கொண்டுசெல்வதும்இரமில்லை

நிலையற்றதை நிலையானதென நம்பும் மனிதா!
நிரந்தரமானதொன்றும் வாழ்வில் இல்லையா?
அழிந்து அற்றுப்போவதுதான் இறுதி முடிவா?
கொடிய வறுமையில் கைகொடாத இனசனம்

பாடுபட்டுப்பணம்சேர்க்க, பின்னால்வரும் இதேசனம்!
வருந்தி அழைத்தாலும் வராத வழித்துணை
பிறப்புக்கும் இறப்புக்கும் இதுவே நடுநிலை!
இடையினில் துளிர்விட்டுமறையும் உறவுகள் பல

மரணத்தைக்கண்டவுடன் முடியும்அவற்றின் கதை!
காற்றினில் கலந்த உயிர் மீண்டும் வராதது உண்மை!
வாழும்வரை வாழ்ந்து அன்பும் அறனும் வளர்த்திடு!
அதற்கப்பால் எதுவுமே இல்லை அடியோடு மறந்திடு!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்