சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம்-273 ]
“விடுமுறை”

பள்ளிப்பருவ ஞாபகம் என்றாலே விடுமுறை
சிறுவனாய் மகிழ்ந்து திரிந்ததைமறக்கா விடுமுறை
வார முடிவில் வருமந்த இருநாட்கள் விடுமுறை
பருவமுடிவில் தவறாதுவரும் தவணை விடுமுறை

அடிக்கடிவந்துபோகும் பண்டிகைவிடுமுறை
மொத்தவருடத்தில் அரைவாசி ஆனந்த விடுமுறை
இழக்க மனம் வருமா விடுமுறை தரும் பேரின்பம்?
அடிமையாய் ஓய்வின்றி உழைத்ததும் மறக்குமா?

தொழில்புரட்சி இல்லையேல் மாறுமா இவ்அவலம்?
எட்டுமணிநேரவேலை இளமையிற் கல்வி கிட்டுமா?
விலங்குகள் கூட உடல்களைத்தபின் ஆறும்
மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த ஓய்வில்லா அராஜகம்?

சிந்திக்கத்திறன் இருந்தும் பிறரைநம்பாத தன்மை
போராட வலுவிருந்தும் சேர்ந்துசெயற்படாப்பான்மை
சுதந்திரம் என்பது சும்மாகிடைப்பதில்லை
போராடிப்பெறும் விடுமுறைச்சலுகைகள்.
நம்பவேண்டியவிடுமுறையின் வளர்ச்சிப் படிகள்!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.