சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 272 ]
“அடிக்கல்”

வானுயர்ந்த கோபுரமும் ஒருநாள் மண்ணில்சாயும்
தான் விழுந்த காரணத்தை அத்திவாரத்திடம் கேட்கும்
உறுதியற்ற அடிமானமே வீழ்ச்சியின் படிமானம்
ஆதிமனிதன் அனுபவமே அறிவின் அடிக்கல்லாம்.

கண்காணும் காட்சிக்கும் உண்மைக்கும் வெகுதூரம்
உலகமுருண்டை என்பதை அனுபவத்தால் கண்டவன்
உலகிற்குரைத்தபோது முட்டாள் பட்டம் பெற்றவன்
தட்டைஎனக்கூறமுயலும் முட்டாள் எவனும் ஈங்கிலன்

நம்பாதவற்றைக் கற்பனையாக்குவது மனிதகுணம்
இலக்கியத்தில்பறந்தவிமானத்தைகற்பனைஎன்பானா
கல்வெட்டும் அகழ்வாராட்சியும் விஞ்ஞானசான்றுகள்
கற்பனைவாழ்வின் உண்மையுணரா மூடர்கள்

பிரமிப்பூட்டும் உலகஅதிசயஆராய்ச்சி முடியவுமில்லை
குளக்கோட்டனின்கந்தளாய்குளநிர்மாணம்,பூதங்களா
தெரியவில்லை?
தன்னுயிர்போல் பிறரை நேசிப்பவன்கடவுளாகின்றான்
இல்லையென்னாது வழங்கியவன்வள்ளல்ஆகின்றான்.

நடுகல்லாய் வாழ்பவன் புறங்காணாவீரனாகின்றான்
கடன்பட்டுதந்தைக்கு மணிமண்டபங்கட்டிவிழா எடுக்கின்றான்
மனிதத்தைப்போற்றி வாழ்ந்தவன் வரலாற்றில் அடிக்கல்லாகின்றான்
சீரான அத்திவாரம் கொண்டவனே மரணத்தின்பின்பும் வாழ்கின்றான்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.