சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 272 ]
“பள்ளிப்பருவம்”

இளமையில் கல்வி சிலைமேல்எழுத்து!
பள்ளிப்பருவத்தைக்ற்காததால் தலையெழுத்து என்னாகும்?
கட்டாயக்கல்வி சட்டமின்று உலகெங்கும்!
சிறுவர்களை வேலைக்கமர்த்தல், பாலியல் துஷ்பிரயோகம் இன்றும் தொடர்கிறதே?

காலங்களில் வசந்தம்,பருவங்களில் இளமை என்றும் இனிமை
தாயின்கையைப்பற்றி பள்ளி செல்லும் குழந்தையின் நம்பிக்கை!
பொறுப்பில்லை,துன்பமில்லை,சிதைத்தல் நியாயமா?
பள்ளிப்பருவம் மனிதவாழ்வில் கிடைத்ததொருபொற்காலம்

சீரான வழிகாட்டும் பள்ளிப்பருவம் இலக்கைஅடையும் வரை தொடரும்
ஆரம்பக்கல்விக்கு அன்னையைப்போலொருஅன்பான ஆசிரியை வரப்பிரசாதம்!
வருடங்கள் உருளும், வகுப்புக்களும் உயரும் அறிவும் வளரும், ஆளுமையும் பெருகும்
இதுவே பள்ளிப்பருவம் வழங்கும் உண்மையான வளர்ச்சி

மல்லிகையும் மலர்ந்த பின்பே மணம் பரப்பும்
பள்ளிப்பருவமும் முதிர்வடைய காதல் அரும்புகள்படரும்
பள்ளிச்சினேகம் படலையோடுபோனாலும், மண்ணில் புதையுண்ட இரத்தினங்கள்
பின்னாளில் அறிஞராய்,அரஙசியல்தலைவராய்,அதிகாரியாய் ஒளிவீசலாம்

“நல்லொழுக்கமும் விடாமுயற்சியும் உயர்நிலையடைய பள்ளிப்பருவமொரு குருகுலமாம்”

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.