சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 270 ]
“வசந்தம்”

வசந்தகாலம் வாழ்வில் ஒருமுறையே மலரும்
வசந்தத்தின் கோலங்கள் துன்பமாயின் கண்ணீரில் கரையும்
நிலையான நினைவுகளோ நீண்டகாலம் நிலைக்கும்
இன்பதுன்பத்தின்திசைகாட்டி வசந்தமே,கலங்கரைவிளக்கம்

இயற்கையிலும் வந்துபோகும்பருவகாலங்கள்
இனிமையான வசந்தமே மகுடம்சூடும் பொற்காலம்
மாரிகோடைக்கிடையில்பொங்கும் வசந்தம் தன்னை இனம்காட்டும்
வசந்தத்தை ஒருபெண்ணாக்கி காலங்களில் அவள் வசந்தமென்றனர்

அசையுமனைத்துயிரும் இயல்பாக இனம்பெருக்க காதல்வழிகாட்டும்
அசையாததாவரும் மலர்ந்து மணம்வீசிவசந்தத்தை வரவேற்கும்
பழங்கள் வித்துக்கள் பெருக்கி இனப்பரம்பல் செய்யும்
உணவுப்பஞ்சமின்றி உயிர்வாழ வழிகாட்டும் வசந்தமே!

நீயின்றேல் வாழ்வேது? இயல்பானஇயற்கைக்குப்பொருளேது?
வசந்தகாலஇலக்கியங்கள் இன்றேல் மொழிவளர்ச்சிஏது?
வசந்தகாலக்கலைகள் இன்றும் சோபை இழக்கவில்லையே!
வசந்த்ததின் வர்ணஜால அழகுப்பரவசத்திற்கு ஈடிணையுமுண்டோ?

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.